குறைந்த விலை, அதிக ஊட்டச்சத்து மற்றும் அனைத்து பருவகாலத்திலும் கிடைக்கும் தன்மை காரணமாக, வாழைப்பழம் உலகில் அதிகம் உண்ணப்படும் பழங்களில் ஒன்றாகும் மற்றும் அதிக லாபம் தரும் பயிராக உள்ளது. வாழை உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இது ஆண்டு முழுவதும் வளரக்கூடியது ஆனால் வாழையின் தழை வளர்ச்சிப் பருவம் நல்ல மழையைப் பெற வேண்டும். சில நல்ல சாகுபடி முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம். குழிகளில் பயிரிட வேண்டும். கோடையில் பயிரிடும் போது, ஒரு மாதத்திற்கு முன்பே குழிகளை தோண்டி, சூரிய கதிர்படும் படி செய்ய வேண்டும், இதனால் மண்ணில் எஞ்சியிருக்கும் தீங்கு விளைவிக்கும் கூண்டுப்புழுக்கள் அல்லது பூச்சிகளின் புழுக்கள் அழிக்கப்படும். பசுந்தாள் உரம் பயிர்களான தக்கைப் பூண்டு அல்லது தட்டைப்பயிறு போன்ற பயிர்களை நடவு செய்வதற்கு 8-10 வாரங்களுக்கு முன்பு வளர்த்து மண்ணில் உழ வேண்டும், வாழை நட்டு 45 நாட்களுக்குப் பிறகு சணப்பை வளர்த்து, ஒரு மாதத்திற்குப் பிறகு அவற்றை மண்ணில்உழ வேண்டும். நடவு செய்யும் போது வேப்பம் புண்ணாக்கு மற்றும் சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸுடன் தொழு உரம் மற்றும் மேல் மண் ஆகியவற்றைப் பயன்படுத்தி குழிகளை நிரப்பவும். திசு வளர்ப்பு தாவரங்களை பயன்படுத்துவது நோயற்ற மற்றும் சீரான பயிர் முளைப்பை வழங்குகிறது. திசு வளர்ப்பு செடிகள் கிடைக்கவில்லை என்றால் நோய் மற்றும் பூச்சி இல்லாத செடிகளில் இருந்து கிழங்குகளை எடுக்கவும். வாழை அதிக தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துக்கொள்ளும் பயிர் ஆகும். ஒரு வாழை செடிக்கு 300 கிராம் நைட்ரஜன், 150 கிராம் பாஸ்பரஸ் மற்றும் 300 கிராம் பொட்டாசியம் ஆகியவை தேவைப்படுகின்றன.
பயிருக்கு நீர்ப்பாசனம் செய்ய சொட்டு நீர் பாசனம் சிறந்தது. குழிகளை நடவு செய்த உடன், 4 நாட்களுக்குப் பின், பிறகு ஒவ்வொரு வாரமும் பாசனம் செய்ய வேண்டும். வயலில் களைகள் வளராமல், மூடு பயிர்களை வளர்க்கவும்.ஊடுபயிர்களான காபி, தட்டைப்பயிறு, கத்தரி, கூர்க்கன் கிழங்கு, மஞ்சள், கருவேப்பிலை, முள்ளங்கி, இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றை பயிரிடுவதன் மூலம் விவசாயிக்கு கூடுதல் வருமானமும் பாதுகாப்பும் கிடைக்கும்.கோதுமை வைக்கோல், கரும்பு குப்பை அல்லது காய்ந்த புல் ஆகியவற்றைக் கொண்டு நிலப்போர்வை செய்வது களை வளர்ச்சியை அடக்கி, வயலில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். நூற்புழு பிரச்சனை உள்ள வயல்களில் சாமந்தியை பொறி பயிராக வளர்க்கலாம்.அசுவினிக்கு பியூவேரியா பாசியானா போன்ற உயிர்க்கட்டுப்பாட்டு முறைகளை முயற்சிக்கவும், பனாமா வாடல் நோய்க்கு நடவு செய்த இரண்டாவது மாதத்தில் தொழு உரத்துடன் 30 கிராம் டிரைக்கோடெர்மா விரிடே அல்லது சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸை இடவும். மஞ்சள் பழுப்பு நிற நோயுற்ற அல்லது இறந்த இலைகளை கவனித்தபடி அகற்றவும். பிரதான செடியுடன் வளரும் கிழங்குகள் அல்லது கன்றுகளை வெட்டி, அடுத்த பருவத்திற்கு ஒரு கன்றை மட்டும் விடவும். வாழைப்பழங்கள் துளிர்க்க ஆரம்பித்தவுடன் ஆண் பூவை வெட்டிவிடவும். சிகடோகா இலைப்புள்ளி போன்ற நோய்களைத் தவிர்க்க முறையான வடிகால் வசதியை உறுதி செய்யவும். தண்ணீர் தேங்குவது வாழைப்பயிருக்கு கேடு. கனமான காய்கள் காய்த்த பின், மூங்கில் அல்லது கயிறுகளால் தண்டுக்கு முட்டு கொடுக்கவும். நடவு செய்த 3 - 4 மாதங்களுக்குப் பிறகு, செடியின் அடிப்பகுதியைச் சுற்றியுள்ள மண்ணின் அளவை 10 - 12 அங்குலம் உயர்த்தவும். வாழை காய்கள் மீது சூரிய ஒளி பாதிப்பைத் தவிர்க்க, இரு முனைகளையும் காற்றோட்டத்திற்குத் திறந்து வைத்து, வாழை கொலையை பிளாஸ்டிக் தாளால் மூடவும். குள்ள வாழை வகைகள் 11- 14 மாதங்களிலும், உயரமான ரகங்கள் 14- 18 மாதங்களிலும் முதிர்ச்சியடையும். பழங்கள் வினையியல் முதிர்ச்சி அடைந்ததும் அறுவடை செய்யவும். அறுவடை செய்யப்பட்ட பழங்களை 48-72 மணி நேரம் காற்று புகாத முன் சூடேற்றப்பட்ட அறையில் வைத்து பழுக்க வைக்கவும்.