திட்டத்தின் விளக்கம் இத்திட்டத்தின் கீழ், குறுவைப் பருவத்தில் நெற்பயிருக்கு மாற்றாக குறைந்த நீர் தேவையுடைய பயிர்களான சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துக்கள் ஆகிய பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க, விதைகள், திரவ உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், திரவ இயற்கை உரங்கள் போன்ற இடுபொருட்கள் 50 % மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது..
மானியம்: நிலக்கடலை : 50% மானியம் அதிகபட்சமாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 4,700 பயிறு வகை : 50% மானியம் அதிகபட்சமாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 1740 சிறுதானியம் : 50% மானியம் அதிகபட்சமாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 1150 தகுதி: சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தேவையான ஆவணங்கள்: சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், பின்னேற்பு மானியம் பெற கொள்முதல் பட்டியல் அல்லது ஆட்கூலி பட்டியல் மற்றும் புகைப்பட ஆவணங்கள்