திட்டத்தின் விளக்கம் தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மர சாகுபடியினை ஊக்குவிக்கும் பொருட்டு, 2022-23 ம் ஆண்டில் பனை மேம்பாட்டு இயக்கம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10 இலட்சம் பனை விதைகள் விநியோகம், 160 ச.அடியில் பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க உபகரணங்கள் வழங்குதல், பனை ஏறும் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் சிறந்த பனை ஏறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கான விருது முதலிய திட்ட இனங்களுக்கான மானிய உதவிகள் வழங்கப்படும். மானியம் மதிப்பு கூட்டு பொருட்களை உற்பத்தி செய்ய கருவி வழங்குதல் : 50% மானியம் அலகு ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ. 4,000/- பனை ஏறும் விவசாயிகளுக்கு கருவி வழங்குதல் : 50% மானியம் அலகு ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ. 4,500/- தகுதி சென்னை மற்றும் நீலகிரி நீங்கலாக அனைத்து மாவட்ட விவசாயிகள் சிறு / குறு விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் தேவையான ஆவணங்கள் 1.சிட்டா 2.அடங்கல் 3.பயனாளி புகைப்படம் - 2 எண்கள் 4.ரேஷன் அட்டை/ ஸ்மார்ட் அட்டை நகல் 5.ஆதார் அட்டை நகல் 6. வங்கி கணக்கு விவரம் 7.தொடக்க பனை வெல்ல கூட்டுறவு சங்க உறுப்பினர் அட்டை 8. பனை ஏறுவதற்கான உரிமம்