திட்டத்தின் விளக்கம் : தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், விளைச்சலைப் பெருக்கவும், தோட்டக்கலை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் 100 சதவீத மாநில அரசின் பங்களிப்பில் 2023-24 ஆம் ஆண்டு மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் ரூ.30.69 கோடி நிதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கம், உயர் தொழில்நுட்ப முறைகளில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்தல், மாடித்தோட்டத் தளைகள் விநியோகம், பழச்செடி தொகுப்புகள் விநியோகம், வாழை/மரவள்ளியில் காய்கறிகள் ஊடுபயிர் சாகுபடி, பல்லாண்டு தோட்டக்கலைப் பயிர்களில் காய்கறிகள் ஊடுபயிர் சாகுபடி, வெற்றிலையில் ஒருங்கிணைந்த உர மற்றும் பயிர் பாதுகாப்பு மேலாண்மை, நெகிழிக் கூடைகள் வழங்குதல்,குறைந்த மதிப்பிலான வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல், காளான் வளர்ப்பு கூடம் அமைத்தல், அரசு கல்வி நிலையங்கள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களில் தோட்டம் அமைத்தல், தொகுப்பு முறையில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடிக்கான இயக்கம் போன்ற திட்ட இனங்களை உள்ளடக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. மானியம் காளான் வளர்ப்பு குடில்: 50% மானியம் அலகு ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ. 50,000/- தகுதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், தூத்துக்குடி, விருதுநகர், நாமக்கல், திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம்மாவட்ட விவசாயிகள் மற்றும் தனிநபர்கள் சிறு / குறு விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் தேவையான ஆவணங்கள் 1.சிட்டா 2.அடங்கல் 3.பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 2 எண்கள் 4.ரேஷன் அட்டை/ ஸ்மார்ட் அட்டை நகல் 5.ஆதார் அட்டை நகல் 6. வங்கி கணக்கு விவரம்