மின்னணு தேசிய வேளாண் சந்தை அல்லது இ-நாம் என்பது இந்தியாவில் விவசாயப் பொருட்களுக்கான இணைய வர்த்தக தளமாகும். இந்த சந்தை விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு ஆன்லைன் மூலம் பொருட்களை வர்த்தகம் செய்ய உதவுகிறது. இந்தச் சந்தை சிறந்த விலையைக் கண்டறிய உதவுகிறது மற்றும் அவர்களின் விளைபொருட்களை சீராக சந்தைப்படுத்துவதற்கான வசதிகளை வழங்குகிறது.
ஒரு விற்பனையாளர்/விவசாயிக்கு இ-நாமின் நன்மைகள்:
- சிறந்த விலை மூலம் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மை
- அதிக சந்தைகள் மற்றும் வாங்குபவர்களுக்கான அணுகல்
- விலைகள் மற்றும் அருகிலுள்ள சந்தைகளில் வருகை பற்றிய நிகழ் நேரத் தகவல்
- விரைவான பணம் பரிமாற்றம் - ஆரோக்கியமான நிதி சுயவிவரத்தை உருவாக்க முடியும்
எப்படி பதிவு செய்வது: பின்வரும் வழிகளில் பதிவு செய்யலாம்.
- இ-நாம் இணையதளம் வழியாக - http://www.enam.gov.in
- கைபேசி செயலி மூலம்
- சந்தைப் பதிவு மூலம் (கேட் நுழைவில்)
சரியான ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-நாம் சந்தையை நீங்கள் பார்வையிடலாம். -இ-நாமில் பதிவு செய்ய கட்டணம் இல்லை.
- பதிவு செய்ய தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்கள்:
- பெயர், பாலினம், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், வங்கி விவரங்கள் போன்ற கட்டாய விவரங்கள்.
- பாஸ்புக் (காசோலை இலை), ஏதேனும் அரசாங்க அடையாளச் சான்று போன்ற ஆவணங்கள்.